உங்கள் கைப்பேசி திருடப்பட்டு விட்டதா? இதோ வந்துவிட்டது புதிய இணையத்தளம்!

கைப்பேசிகள் காணாமல் போனால் அல்லது களவாடப்பட்டால் அது குறித்து உடனடியாக முறையிடுவதற்கு காவற்துறையினர் விசேட இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

www.ineed.police.lk என்ற முகவரியில் இந்த இணையத்தளம் இயங்குகிறது.இந்த இணையத்தளத்தை காவற்துறை மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆரம்பித்து வைத்ததாக, காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கைப்பேசிகள் காணாமல் போனப் பின்னர் அல்லது களவாடப்பட்டால், உடனடியாக இதில் முறைப்பாடு செய்ய முடியும்.

பின்னர் குறித்த முறைப்பாடு உரிய பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவற்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.