முல்லைத்தீவில், கிணற்றில் விழுந்து குழந்தை பலி!

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கள்ளப்பாடு பகுதியில் குழந்தை ஒன்று கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று (10) மாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிணற்றில் விழுந்த குறித்த குழந்தையை மீட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.

முல்லைத்தீவு, கள்ளப்பாடு பகுதியை சேர்ந்த 4 வயதுடைய ரஜிதன் ரத்சன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.