ரணில் விக்ரமசிங்கவுடன் அரசாங்கத்தை நடாத்த தயாரில்லை! ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அரசாங்கத்தை நடாத்த தயாரில்லை என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன மீண்டும் தெரிவித்துள்ளார்.

இன்று இரவு ஜனாதிபதி மற்றும் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார்.

அதேபோல் , இடைக்காலத்தடை குறித்த உயர்நீதிமன்றின் தீர்ப்புக்கு அமைய செயற்பட ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.