நாளை மஹிந்த ரஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கிறார்!

மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யவார் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறியுள்ளார்.

இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிடும் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் தனது பிரதமர் பதவியில் இருக்கும் வரை வேறொரு பிரதமரை ஜனாதிபதியால் நியமிக்க முடியாது போகும் என்பதால்´ மஹிந்த ராஜபக்ஷ இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

நாளைய தினம் நாட்டு மக்களுக்கு விஷேட உரையொன்றை நிகழ்த்திவிட்டு அவர் தனது பிரதமர் பதவியில் இருந்து விலகுவார் என்று லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறியுள்ளார்.

மேலும் மஹிந்த ரஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விஷேட உரையாற்றிவிட்டு நாளை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யவார் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ரஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.