முல்லைத்தீவில் சங்கிலி அறுத்த திருடர்கள் சிசிரீவி கமராவில் சிக்கினர்!

முல்லைத்தீவீல் யுவதி ஒருவரின் தங்கச் சங்கிலி அறுத்துச்சென்ற இரண்டு சந்தேக நபர்களை சீசீரிவி கமராவின் உதவியுடன் காவல்துறையினர் நேற்று அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது..

யுவதி ஒருவர் நேற்று முன்தினம் உடுப்புக்குளம் பிரதான வீதி வழியே சிலாவத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிலில் வந்த இரண்டு நபர்கள் யுவதியை இடைமறித்து அவர் அணிந்திருந்த பெறுமதியான தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் சம்பவம் குறித்த பாதிக்கப்பட்ட யுவதி முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன் அடிப்படையில் சிலாவத்தை பிரதான வீதயில் இயங்கும் நிறுவனம் ஒன்றின்; பொறுத்தப்பட்டிருந்த சிசிரீவி கமரா பொலிஸாரினால் பரிசோதிக்கப்பட்டது. இதன்போது சங்கிலி அறுத்துச் சென்ற சந்தேக நபர்களை பாதிக்கப்பட்ட யுவதி பொலிஸாருக்கு அடையாளம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.