இறந்த நடிகை ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்ற அஜித் செய்த செயல்!

தல அஜித் இன்று தன்னுடைய 59 படத்தை தொடங்கினார். பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பமானது. இதில் யுவன் ஷங்கர்ராஜா தான் இசையமைப்பாளர், நிரவ்ஷா தான் ஒளிப்பதிவாளர் என்று முடிவாகியுள்ளது.

மறைந்த முன்னாள் லேடி சூப்பர்ஸ்டாரான ஸ்ரீதேவியின் இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் அஜித் கெஸ்ட்ரோலில் நடித்தார்.

அப்போது தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு தமிழ் படம் நடித்து தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம். அந்த ஆசையை நிறைவேற்றும் விதமாக அவரது கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் நடிக்கிறார். இப்படம் தல பிறந்தநாளான மே 1ம் தேதி வெளியாகவுள்ளதாம்.

இதுமட்டுமல்ல போனிகபூரின் தயாரிப்பில் இந்த படம் முடிந்ததும் அடுத்த படம் ஜுலையில் தொடங்கி 2020 ஏப்ரல் 10ம் தேதி வெளியாகவுள்ளதாம்.