மைத்திரிக்கு மகிந்த எழுதிய மடல்!

நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் தேசிய சிக்கல்கள் இருந்த காலத்தில் நாட்டை கட்டியெழுப்புவதற்காக தன்னை பிரதமராக நியமித்தமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்வதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள மஹிந்த ராஜபக்ஷ, குறித்த கடிதத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார். தான் பிரதமராக இருந்த காலத்தில் அனைத்து மக்களுக்கும் தன்னால் முடிந்தளவு சேவை செய்ததாகவும் அவர் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தனது மனசாட்சிக்கு அமைய பிரதமர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்ததாகவும் அவர் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே, கடந்த ஒன்றரை மாதங்களாக தனக்கு பல்வேறு வகைகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு மஹிந்த ராஜபக்ஷவினால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை மேலே காணலாம்