388 மில்லியன் ரூபா பெறுமதியான போதை பொருளுடன் இளைஞன் கைது!

பங்களாதேஷ் நாட்டை செர்ந்த 23 வயதான இளைஞன் ஒருவன் இரத்மலானை பகுதியில் வைத்து ஒரு தொகுதி ஹெரோயினுடன்
எடுத்துச் செல்ல முற்பட்ட வேளை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது குறித்த நபரிடம் இருந்து 32 கிலோ கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளின் பெறுமதி சுமார் 388 மில்லியன் ரூபா பெறுமதி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.