புற்று நோய் குணமாவதற்கு, இதைத்தான் செய்தேன்!

பிரிட்டனைச் சேர்ந்த நிக்கோலா பேர்பிரேஸ் என்ற 54 வயதான பெண்ணொருவர், தொடர்ந்து டீ குடித்தமையினால் அவரது புற்று நோய் குணமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பெண்ணுக்கு, கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், இடதுபுற மார்பகத்தில் ஒரு கட்டி உருவாகியுள்ளது. இது குறித்து நிக்கோலா பேர்பிரேஸ், முதலில் ஏதோ ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக நினைத்து கவனிக்காமல் விட்டுள்ளார்.

எனினும் இரண்டே வாரத்தில், அந்த கட்டி நிக்கோலாவிற்கு பெரிதாகியுள்ளது. இதனை அடுத்து நிக்கோலா பேர்பிரேஸ், மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை மேற்கொண்ட போது, அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனை அறிந்த நிக்கோலா பேர்பிரேஸ் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். புற்று நோய் நிக்கோலாவிற்கு மூன்றாம் கட்டத்தை தாண்டி விட்டதாக, மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மருத்துவமணையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த நிக்கோலா பேர்பிரேஸ், படுக்கையில் இருக்கும் போது, தினமும் 5 முறை தேனீர் பருகியுள்ளார். அதன்பின் பரிசோதிக்கையில் கட்டியின் அளவு 43 மில்லிமீட்டரிலிருந்து 17 மில்லிமீட்டராக குறைவடைந்துள்ளது.

இதனை மருத்துவர்களும் உறுதிபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து புற்று நோய் குறைந்தாலும், 10 வருடம் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என, நிக்கோலாவிற்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக, அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.