இளம் திருநங்கைக்கு தாலி கட்டிய இளைஞர்… தனிவீடு எடுத்து ஒன்றாக தங்கிய போது நேர்ந்த கதி!

தமிழகத்தில் திருநங்கையை உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்த இளைஞர் தங்களை பாதுகாக்கும்படி காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்தார்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் பூமிகா (27). திருநங்கையான இவர் பி.டெக் பட்டப்படிப்பு படித்துள்ளார்.

இவர் நெல்லையில் உள்ள நகைக்கடையில் வேலை செய்யும் போது அருண்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது.

திருநங்கையை மணக்க எப்படியும் வீட்டில் ஒத்து கொள்ளமாட்டார்கள் என நினைத்த அருண்குமார் மூன்று வருட காதலுக்கு பின்னர் ஐந்து மாதங்களுக்கு முன்னர் கோவிலில் வைத்து பூமிகாவுக்கு தாலிகட்டினார்.

பின்னர் மனைவியுடன் தனியாக வீடு எடுத்து தங்கினார்.

இதை தெரிந்து கொண்ட அருண்குமாரின் பெற்றோரும், உறவினர்களும் பூமிகாவுக்கு கொ லை மி ரட்டல் விடுத்தனர்.

இதனால், நெல்லையை காலி செய்து, சேலத்துக்கு வந்து ஒரு வீடு எடுத்து தம்பதிகள் தங்கினர்.

இதையடுத்து, சேலத்துக்கும் வந்த அருண்குமார் பெற்றோர், எங்கள் மகனை விட்டு ஓடிவிடு. இல்லையென்றால் கொ ன்று புதைத்து விடுவோம் என்று மீண்டும் மிர ட்டல் விடுத்தனர்.

இதனால் பயந்து போன தம்பதி சேலம் பொலிஸ் ஆணையரிடம் இது குறித்து மனு அளித்தனர். அதில், பூமிகா இல்லாமல் வாழ முடியாது, அவள் தான் என் மனைவி என்று முறையிட்டார் அருண்குமார்.

இதையடுத்து பொலிசார் அருண்குமார் பெற்றோரிடம் போனில் பேசி 2 பேரையும் பிரிக்க நினைத்தால், கடுமையான நடவடிக்கை எடுப்போம் என எச்சரித்துள்ளனர்.