சற்றுமுன் புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளி வெளியானது!

புலமைப்பரிசில் பரிட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம் 153 புள்ளிகளும், கிளிநொச்சி 152 புள்ளிகளும், மன்னார் 151 புள்ளிகளும், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு 152 புள்ளிகளும் வெட்டுப்புள்ளிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் மட்டக்களப்பு 152 புள்ளிகள், அம்பாறை 153 புள்ளிகள் மற்றும் திருகோணமலை 151 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் தமிழ் மொழிமூலம் 154 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முடிவுகள் தொடர்பாக மேல்முறையீடுகள் 21ம் திகதிக்கு முன் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.