இரண்டு அடி உயரம் கொண்ட பாகிஸ்தானியரின் திருமணம்!

இரண்டு அடி உயரமே கொண்ட புர்ஹான் சிஷ்டியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பஞ்சாபி பாட்டுக்கு நடனமாடும் காணொளி வைரலாகியுள்ளது.

போலியோ பாதிப்புக்குள்ளாகி, வீல் சேரில் வாழ்ந்து வரும் சிஷ்டி, போபோ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுகிறார். ஓஸ்லோவில் நடைபெற்ற இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

விழாவில், பஞ்சாபி பாடலுக்கு போபோ நடனமாடுவதும், போபாவுடன், அவரது மணமகள் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களும் வைரலாகிவிட்டது.

மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், பல்வேறு தொழில்களை தொடங்கி, வெற்றிகரமான தொழிலதிபராக விளங்கும் போபோ, தனது உடல் குறைபாட்டையும் தாண்டி மிக மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

போபோவின் ஃபேன்ஸ் சுமார் 13 நாடுகளில் இருந்து இவ்விழாவுக்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.