கனடாவில் “பிரபஞ்ச தமிழ் அழகி 2019” ஆக தெரிவு செய்யப்பட்ட ஈழத்தமிழ் யுவதி!

image_pdfimage_print

ஈழத்தைச் சேர்ந்த டக்சினி என்ற யுவதி கனடாவில் பிரபஞ்ச தமிழ் அழகி 2019 ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளார்

ரொறன்டோ நகரில் கடந்த மாதம் 27 ஆம் திகதி இந்த நிகழ்வு நடைபெற்றது.

சிதம்பரப்பிள்ளை டக்சினி பிறந்தது வளர்ந்ததுதிருகோணமலையில். அவர் கல்வி பயின்றது திருகோணமலை சென்ற் மேரிஸ் கல்லூரியில் ஆகும்.

அவர் கடமை புரிவது HSBC வங்கியில். மும்மொழிப்புலமை மிக்கவர் என்பதோடு பலவீனங்களை பலமாக மாற்றும் பலமிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை மூதூர் பழம்பெரும்பதி பள்ளிக்குடியிருப்பின் பிரபல குடும்பப்பின்னணியான தம்பிப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை , மற்றும் தவமணிதேவி ஆகியோரின் கனிஷ்ட புத்திரிகளில் ஒருவர் டக்சினி என்பது குறிப்பிடத்தக்கது.