கோர விபத்தில் 20 பேர் காயம்!

காலி – அகுரஸ்ஸ பிரதான வீதி தகங்கே – தாப்பே சந்தி பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்து கொண்டிருந்த அரச பேருந்து ஒன்று தனியார் பேருந்து ஒன்றுடன் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் காராப்பிடிய இமதுவ மற்றும் அகுரஸ்ஸ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் நிலைமைய காவலைக்கிடமாக இல்லை என காவற்துறை தெரிவித்துள்ளது .