நடிகைகளுடன் சொகுசு வாழ்க்கை… சினிமா மீது தீராத ஆசை! கொள்ளையன் முருகனை பற்றி திடுக்கிடும் தகவல்!

தமிழகத்தில் நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பத்தில், முக்கிய குற்றவாளியாக தேடப்படும் முருகன், கொள்ளையடித்த பணத்தில் படம் தயாரிப்பது, நடிகைகளுடன் சொகுசு வாழ்க்கை வாழ்வது என்று இருந்துள்ளான்.

திருச்சியில் இருக்கும் லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கடந்த 2-ஆம் திகதி கைவரிசை காட்டிய கொள்ளையர்கள், அங்கு 30 கிலோ நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், அதிரடி சோதனையில் ஈடுபட்ட பொலிசார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன் என்பவரை கைது செய்தனர். கையில் சிக்கிய சுரேஷ் என்பவரை பொலிசார் கோட்டை விட்டதாக கூறப்பட்ட நிலையில், அவரையும், முரளி என்பவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இவர்களோடு இன்னும் சிலர் கைது செய்யப்பட்டு, ரகசியமாக விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இவர்கள் கொள்ளையடிப்பது மட்டும் தான், இதற்கு எல்லாம் மாஸ்டர் மைண்ட்டாக இருந்தது முருகன் என்பவர் தான் தகவல் வெளியானது, அவரை பிடிப்பதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது முருகன் இருக்கும் இடத்தை பொலிசார் நெருங்கிவிட்டதாக கூறப்படும் நிலையில், அவரைப் பற்றி அடுத்தடுத்த தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

தமிழகத்தில் மட்டுமின்றி இது போன்ற கொள்ளை சம்பவங்களை பிற மாநிலங்களிலும் முருகன் மற்றும் அவனுடைய கூட்டாளிகள் செய்துள்ளனர்.

முருகனுக்கு சிறுவயதிலிருந்தே சினிமா மீது தீராத ஆசை. இதனால் அதற்காக சிறு சிறு திருட்டில் ஈடுபட்டு வந்த அவன், அதன் பின் பெரிய திருட்டுகளில் ஈடுபட்டுள்ளார்

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகள் பேசும் முருகன், சில வருடங்களுக்கு முன்பு, காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தை அடுத்த பூஞ்சேரிக்கு குடிபெயர்ந்துள்ளான், முருகனுடன், தினகரன், கோபால், சுரேஷ் உள்ளிட்டோருடன் இயங்கிவந்தார்.

முருகனுக்கு தினகரன்தான் எல்லாம். கொள்ளையடித்த நகைகளை நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தாஸ் என்பவர் மூலம் பணமாக மாற்றி கொடுத்து வந்துள்ளார்.

அதுமட்டுமின்றி, முருகன் கையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் உள்ள வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் லிஸ்ட் உள்ளது.

அதன்படி முதலில் கிராமப்புற வங்கிகளைக் குறிவைத்த முருகன், ஆந்திரா மாநிலம், சைபராபாத் மற்றும் சித்தூரில் இயங்கிவரும் டெக்கான் கிராமீனா வங்கிகளில் 18 கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளி நகைகளைக் கொள்ளையடித்துள்ளான்.

இப்படி வெளிமாநிலங்களில் கொள்ளையடித்து வந்த முருகன், அதை வைத்து சினிமாவில் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படங்களை தயாரித்துள்ளான். பெண்கள் விஷயத்தில் முருகன் வீக், இதனால் நடிகைகள் பலரை பணத்தை வாரி வழங்கு தன் வழியில் விழ வைத்துள்ளான்.

பணத்தை வாரி வழங்கும் முருகன், உள்ளூர் பொலிசாரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளான். அவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வந்துள்ளான். வெளி மாநில பொலிசார் வந்தால் சிக்காத படி உள்ளூர் பொலிசார் உதவியுள்ளனர்.

இப்படி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த முருகனுக்கு தீராத நோய் இருக்கிறது. அப்படி படுக்கை படுகையாய கிடந்த போது தான் ,ஆந்திர பொலிசார் முருகனை கைது செய்துள்ளனர், அதன் பின் அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு வெளியே வந்த அவன், சில நாட்கள் நன்றாக இருந்துவிட்டு இப்போது மீண்டும் கொள்ளை சம்பவத்தில் இறங்கியுள்ளான் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் முருகன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டால் பல உண்மைகள் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.