பிக்பாஸ் 3 இறுதி விழாவிற்கு மதுமிதா வராததற்கு இது தான் காரணமா?.. ஆதாரம் காட்டிய கவின் ரசிகரகள்..

பிக்பாஸ்

3 சீசன்னில் முகன், சாண்டி, லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் இறுதி சுற்றிக்கு முன்னேறினார்கள். நேற்று இந்த சீசனின் இறுதி விழா நிறைவுற்றது. முகன் வெற்றியாளராகவும், சாண்டி ரன்னராகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மிகப்பிரம்மாண்டகாக நடைபெற்றது.

ஆனால் இறுதி விழாவில் மதுமிதா வராமல் இருந்தார். இதற்கு காரணம் பிக்பாஸ் குழு மதுமிதாவை அழைக்காமல் இருந்ததால் தான் வரவில்லை என்று அவரின் ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் போட்டியாளர்கள் மதுமிதாவை எப்படி கொடுமைப்படுத்தப்பட்டார் என்ற வீடியோ வைரலாகி வந்தது. லாஸ்லியா, கவின், வனிதா, ஷெரின், தர்ஷன் ஆகியோரால் அதிகளவில் கொடுமைப்படுத்தப்பட்டதால் தான் மதுமிதா இந்த விழாவிற்கு வராமல் இருந்தார் என்று ரசிகர்கள் இணையத்தில் மற்ற போட்டியாளர்களின் ரசிகர்களுடன் சண்டை போட்டு வருகிறார்கள்.

இந்த சீசனின் மக்கள் வெற்றியாளர் மதுமிதா தான் என்று பேனர்களும் கிரியேட் செய்து பகிர்ந்து வருகிறார்கள்.