ரயிலில் அடிப்பட்டு இறந்த பிச்சைக்காரன்… வங்கி கணக்கு புத்தகத்தை பார்த்து வியந்த பொலிஸ்!

இந்தியா, மும்பையில் ரயில் அடிப்பட்டு இறந்த பிச்சைக்காரன் குடிசையில் சோதனை செய்த பொலிசார் வியப்படைந்துள்ளனர்.

மும்பை ரயில் பிச்சை எடுத்து வந்த Biradichand Pannaramji Azad என்ற 82 வயது முதியவர் ரயில் அடிப்பட்டு இறந்துள்ளார். இதனையடுத்து, Azad-ன் குடும்பத்தை கண்டறியும் விசாரணையில் ரயில்வே பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

விசாரணையில் மூலம் Azad ரயில்வே தண்டவாளத்திற்கு அருகே இருந்த குடிசையில் தங்கியிருந்ததை கண்டறிந்த பொலிசார், அங்கு சோதனை செய்துள்ளனர்.

சம்பவம் குறித்து காவல் அதிகாரி Pravin Kamble கூறியதாவது, அந்த குடிசையில் நடந்த சோதனையில் நான்கு பெட்டிகளை கண்டெடுத்தோம். அதை திறந்து பார்த்த போது பல நாணயங்கள் இருந்தன.

அதை எண்ணியதில் சுமார் 1.75 லட்ச ரூபாய் இருந்தது. பின்னர், குடிசையின் மூலையில் இருந்த பொட்டியில் Azad-ன் ஆதார், பான் கார்டு இந்தது.

அதன் மூலம் 1937 ஆம் ஆண்டு பிப்ரவரி 27ம் திகதி பிறந்த Azad, முன்னதாக Baiganwadi பகுதியில் வசித்து வந்துள்ளார் என தெரியவந்தது.

அந்த பெட்டியில் மற்ற ஆவணங்களும் இருந்தன, அதில் நிலையான வைப்பு தொகையாக ரூ .8.77 லட்சம், இரண்டு வெவ்வேறு வங்கிகளில், சேமிப்புக் கணக்குகளின் பாஸ்புக்குகளும் இருந்தன.

மேலும், அவர் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்றும், அவருக்கு Sukhdev என்ற மகன் இருப்பதும் தெரியவந்தது. Azad தான் வைத்திருக்கு அனைக்கு பணத்திற்கும் தனது மகன் Sukhdev-வின் பெயரை நாமினியாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, ராஜஸ்தானில் உள்ள Azad-ன் மகன் Sukhdev-ஐ தொடர்புக்கொள்ள முயற்சி செய்து வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.