கழிவறைக்குள் இருந்த திடீரென கருப்பாக வந்த தலை.. தன் வாழ்நாளில் அடைந்திடாத பயத்தில் உறைந்த இளம்பெண்!

image_pdfimage_print

அவுஸ்திரேலியாவில் கழிவறைக்குள் சென்ற பெண், அதற்குள் கருப்பாக உருவம் ஒன்று நெளிவதை கண்டு மிகவும் பயந்துள்ளார்.

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட Cairns பகுதியை சேர்ந்த Nicole Errey கூறுகையில், கடந்த வெள்ளிக்கிழமை பணி முடிந்து வீட்டிற்கு வந்து கழிவறைக்கு சென்றேன்.

என் கழிப்பறையின் மூடி திறந்திருந்தது, அதற்குள் பார்த்த போது கருப்பாக எதே ஒன்று நெளிந்துக் கொண்டிருந்தது, அதை கண்டு நான் மிகவும் பயந்துவிட்டேன். திடீரென பாம்பின் தலை வெளியே வந்தது.

உடனே Cairns பகுதியல் பாம்பு பிடிக்கும் Dave Walton-னை அழைத்தேன், அவர் உடனே வந்து பாம்பை பிடித்து சென்றார்.

மறுநாள் இரவு வெளியே செல்ல கிளம்பி, வீட்டின் அனைத்து ஜன்னல்களும் மூடி இருக்கிறதா என பார்க்க சென்றேன், அப்போது, மற்றொரு குளியலறையில் தண்ணீர் மலைப்பாம்பு இருந்தது.

மீண்டும் Dave Walton-னை அழைக்க அவர் பாம்பை பிடித்து சென்றார். நாட்டில் வெப்பமான வெப்பநிலை காரணமாக, பாம்புகள் தலைமறைவாக வெளியே வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பாம்புகள் வெப்பத்திலிருந்து விலகி இருக்க குளிர்ந்த இடங்களில் ஒளிந்து கொள்ள விரும்பும். எனவே நீங்கள் மோசமான பாம்பால் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என Walton கூறியுள்ளார்.