திருமணம் குறித்து இலங்கை லொஸ்லியா அறிவிப்பு! டிரெண்டான கவிலியா காதல்!

image_pdfimage_print

பெற்றோர் சம்மதத்துடன்தான் தனது திருமணம் நடைபெறும் என்று பிக் பாஸ் லொஸ்லியா கூறியுள்ளார்.

பிக் பாஸில் இறுதிப் போட்டி நெருங்கி வந்த நேரத்தில் ஊடகவியலாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று போட்டியாளர்களுடன் பேசியிருந்தார்கள்.

அந்தச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட லொஸ்லியா,

என் அப்பா வீட்டுக்குள் வந்து பேசியது பெரிதாகிவிட்டது. அவர் என்ன பேசினாலும், என் அப்பா. எங்களுக்குள் எந்த உறவுச் சிக்கலும் கிடையாது.

என் நன்மைக்காகவே அவர் பேசியுள்ளார். அவரது சமூகம் அவரை எப்படி நடத்தியது? எனத் தெரியவில்லை. அவர் ரொம்ப பாசமாக இருப்பார். என் பெற்றோர்கள் காதல் திருமணம் செய்தவர்கள்.

நாங்கள் இப்படித்தான் காதலித்தோம் எனச் சொல்லிச் சொல்லிதான் எங்களை வளர்த்தார்கள். ஆனாலும் பெற்றோர் சம்மதத்துடன்தான் என் திருமணம் நடக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிக் பாஸ் முடிந்து சில நாட்கள் ஆனாலும் அதை பற்றிய பேச்சு சமூகவலைத்தளத்தில் குறைந்தபாடு இல்லை.

இதேவேளை, எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த பிக் பாஸ் சீசன் தான் காதல் காவியமாய் உள்ளது. பிக் பாஸ் தமிழ் 3 ஆரம்பித்த நாளில் இருந்தே லவ் கேமை தான் கண்டெண்ட் ஆக்கினார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, கவிலியா ஹேஷ்டேக் டிவிட்டரில் அவ்வப்போது டிரெண்டிங்காகும். கவின், லாஸ்லியா ரசிகர்களும், எதிர்பாளர்களும் இதில் மோதிக்கொள்வர். ஆனால் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் கவிலியா ஹேஷ்டேக் டிரெண்டிங்காகி இருக்கிறது தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்தி நடித்த கைதி படத்தின் ஹேஷ்டேக் தான் நேற்று டிவிட்டரில் முதலில் டிரெண்டிங்கில் இருந்தது. திடீரென கவிலியா ஹேஷ்டேக் பரபரவென டிரெண்டிங்காகி கைதியை முந்தி சென்றது. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் ஒரே குஷியில் உள்ளனர்.