பிக்பாஸின் இறுதிப்போட்டிக்கு மதுமிதாவின் கணவர் வரவில்லையாம்.. பித்தலாட்டம் செய்த விஜய் டிவி.. சிக்கிய ஆதாரம்..!

image_pdfimage_print

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நிறைவடைந்தது. ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தப்படியே முகேன் வெற்றியாளர் ஆனார். அடுத்தப்படியாக சாண்டி ரன்னர் அப் இடத்தை பெற்றார். கோலகலமாக தொடங்கிய கிராண்ட் பினாலேவில் ஆட்டம் பாட்டத்துடன் தொடங்கினார்கள்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இறுதிவரையில் மதுமிதாவையும் சரவணனையும் அழைக்கப்படவே இல்லை.. ஆனால் நிகழ்ச்சியின் இறுதி நாளில், மதுமிதாவின் கணவர் மோசஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றதுபோல் பழைய வீடியோவை வைத்து இணைத்துள்ளனர்.

இதைக்கண்ட மதுமிதாவின் கணவர் மோசஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் நான் போகவே இல்லை எப்படி இது நடந்தது என்று கடுமையாக விமர்ச்சித்து ஆதாரத்தின் வீடியோவையும் ட்விட்டர் பக்கத்தில் இணைத்துள்ளார். மேலும் இதைக்கண்ட நெட்டிசன்கள், ரசிகர்கள் அனைவரும் இப்படி ஒரு பித்தலாட்டமா செய்வது என திட்டி தீர்த்து வருகிறார்கள்..