முல்லைத்தீவில் வீதி விபத்து – பாடசாலை மாணவன் பரிதாபமாக மரணம்!

image_pdfimage_print

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் சைக்கிளில் பயணித்த பாடசாலை மாணவர்கள் இருவரை கப் ரக வாகனம் மோதியதில் மாணவன் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு மாணவன் படுகாயமடைந்து மாஞ்சோலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் கொக்குத்தொடுவாய் மகா வித்தியாலய மாணவன் கேதீஸ்வரன் (வயது -11) உயிரிழந்தார். 9 வயதுடைய மற்றைய மாணவன் படுகாயமடைந்து மாஞ்சோலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மாணவர்கள் இருவரும் சரஸ்வதி பூசை நிகழ்விற்காக வெளியில் சென்றுவிட்டு பாடசாலைக்கு திரும்பியிருந்தாகவும் வாகனம் அதிவேகமாக பயணித்ததாகவும் மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்த மாணவர்கள் மீது குறித்த வாகனம் மோதியுள்ளதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.