இன்றைய ராசிபலன் 09.10.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

image_pdfimage_print

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.

இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷராசி அன்பர்களே!

பல வகைகளிலும் அனுகூலமான நாளாக இருக்கும். சகோதர வகையில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் ஆதாயம் ஏற்பட்டாலும்கூட, சில பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் உதவி கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். முக்கியப் பிரச்னை ஒன்றில் வாழ்க்கைத்துணை உங்கள் ஆலோசனையைக் கேட்பார். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

ரிஷபராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும். குடும்பம் அல்லது வேலை தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாக இருப்பீர்கள். அதிகாரிகளின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தருவதாக இருக்கும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

மிதுனராசி அன்பர்களே!

இன்றைக்கு எதிலும் நிதானமாகச் செயல்படவும். பயணங்களைத் தவிர்ப் பது நல்லது. சிலருக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் வீண்விவா தம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. சிலருக்கு திடீர் செலவு களால் கடன் வாங்கவும் நேரிடும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் சில சங்கடங்கள் ஏற்படக் கூடும். ஆனால், அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் கனிவான அணுகு முறை அவசியம். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தேவையற்ற செலவுகளால் கையிருப்பு கரையும்

கடகராசி அன்பர்களே!

தொடங்கும் காரியங்கள் வெற்றி பெறும் நாள். தேவையான பணம் கிடைக் கும். தாய்வழி உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். ஆனாலும், உற்சாகத்துக்குக் குறை விருக்காது. பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண் டாகும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க செலவு செய்யவேண்டி வரும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும்.

சிம்மராசி அன்பர்களே!

வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். தந்தை யின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தினருடன் வெளியிடங்க ளுக்குச் சென்று வருவீர்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உங்களுடைய திற மைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்துடன் விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

கன்னிராசி அன்பர்களே!

சோர்வு நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களை அரவணைத்துச் செல்வது அவசியம். முடிந்தவரை அவர்களின் விருப் பத்தை நிறைவேற்ற முயற்சி செய்யவும். உறவினர்கள் வருகையால் திடீர் செலவுகள் ஏற்பட்டா லும் சமாளித்து விடுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். சக வியாபாரிகளின் உதவி கிடைக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வராது என்று நினைத்த கடன் தொகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டாகும்.

துலாராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர் களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமை அவசியம். எதிர் பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக் கூடும். ஆனால், தாயின் அன்பு ஆறுதலாக இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும்.

விருச்சிகராசி அன்பர்களே!

தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருப்பது அவசியம்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும்.

தனுசுராசி அன்பர்களே!

பரபரப்பாகவும் மனஉறுதியுடனும் செயல்படுவீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனு கூலமாகும். சகோதரர்கள் உங்களுடைய யோசனையை ஏற்றுக்கொள் வார்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும். சக வியாபாரி களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

மகரராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். பிள்ளைகளால் செலவு ஏற்பட் டாலும் அவசியமான செலவாகவே இருக்கும். ஒரு சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் கோயில் களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். சிலருக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். நண்பர்கள் வகையில் சங்கடங் கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் சோர்வு ஏற்படக்கூடும். வியா பாரம் வழக்கம்போலவே நடைபெறும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களிடம் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது,

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கும்பராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். சிலருக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனு கூலமாக முடியும். தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். ஆனால், உடல் நலனில் கவனம் தேவைப்படும். அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும், சக ஊழியர்களின் உதவியுடன் முடித்து விடுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலுள்ள கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

மீனராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கிடைப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சில ருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். இளைய சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். அலுவலகத் தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற செலவு செய்ய வேண்டி வரும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.