பிக்பாஸ் வீட்டிற்குள் இதை கவனித்தீர்களா? கண்களால் பேசிக்கொண்ட உலகநாயகன் மற்றும் ஈழத்து பெண்! தீயாய் பரவும் காட்சி!

image_pdfimage_print

பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக மலேசியாவைச் சேர்ந்த முகேன் மக்களால் தேர்ந்ததெடுக்கப்பட்டார்.

கடந்த 105 நாட்களில் எதிர்பாராததை எதிர்பார்க்க வைத்த பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது மட்டுமின்றி போட்டியாளர்களுக்கு தனித்தனி ரசிகர் பட்டாளமே ஏற்பட்டது.

இந்நிலையில் பிக்பாஸ் முடிந்து வெளியில் வந்த பிரபலங்கள் சிலர் ரசிகர்களோடு நேரத்தினை செலவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியாவும் ரசிகர்களோடு நேற்றைய தினத்தில் குத்தாட்டம் போட்டதை அவதானித்திருப்பீர்கள்.

பிக்பாஸ் சீசன் முடிவதற்கு முன்பு இறுதிநாளில் கமல் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். அப்பொழுது கமலுடன் வெளியேறத்துடித்த சாண்டியினை பிக்பாஸ் தனது கம்பீர குரலினால் அதட்டினார்.

உடனே சாண்டி மனசு கஷ்டப்பட்டு சோகத்தில் ஆழ்ந்தார். அப்போது கமல் லொஸ்லியாவைப் பார்த்து கண் ஜாடை காண்பித்தார். அதற்கு ஈழத்து பெண் தானும் பதிலுக்கு அதே கண்ஜாடையினை காட்டியுள்ளார். இக்காட்சி தற்போது வரை ரசிகர்களால் திரும்ப திரும்ப பார்க்கப்பட்டும் பகிரப்பட்டும் வருகின்றது.