ரசிகையுடன் டிக்டாக்கில் கலக்கிய பிக்பாஸ் தர்ஷன்… நெட்டிசன்கள் எழுப்பிய சரமாரியான கேள்வி!

பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக மலேசியாவைச் சேர்ந்த முகேன் மக்களால் தேர்ந்ததெடுக்கப்பட்டார்.

கடந்த 105 நாட்களில் எதிர்பாராததை எதிர்பார்க்க வைத்த பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது மட்டுமின்றி போட்டியாளர்களுக்கு தனித்தனி ரசிகர் பட்டாளமே ஏற்பட்டது.

இந்நிலையில் பிக்பாஸ் முடிந்து வெளியில் வந்த பிரபலங்கள் சிலர் ரசிகர்களோடு நேரத்தினை செலவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் ரசிகை ஒருவருடன் நேரத்தினை செலவழித்துள்ளார்.

இந்த காட்சியினை குறித்த ரசிகை டிக் டாக்காகவே மாற்றிவிட்டு இணையத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த காட்சியினை அவதானித்த பலரும் இப்படியெல்லாம் போஸ்ட் போடாதீங்க அப்பறம் மற்ற பெண்களும் கடுப்பாவங்க தானே… என்று கூறி வருகின்றனர்.