ராஜாராணி 2 சீரியலில் இனி இந்த காதல் ஜோடி தான்.. ஹீரோ ஹீரோயினாம்…! வெளியான அதிரடி தகவல்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களில் இளைஞர்களையும் தொலைக்காட்சி முன்பு அமரவைத்து சீரியலை பார்க்க வைத்த தொடர் என்றால் அது ராஜாராணி சீரியல் தான்.

அந்த அளவிற்கு, இந்த சீரியலில் செம்பா கதாப்பாத்திரத்தில் நடித்த ஆல்யமானஸா இளைஞர்களின் மனதை கவர்ந்தார்.

இவர், அதே சீரியலில் நடிக்கும் சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இதற்கிடையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் ராஜா ராணி சீரியல் முடிவடைந்தது.

இந்நிலையில், தற்போது இந்த சீரியலின் இரண்டாம் பாகம் மீண்டும் துவங்க இருப்பதாகவும், இதில் லொஸ்லியா தான் கதாநாயகியாக நடிப்பார் என்றும் செய்திகள் வெளியாகின,

இதை உறுதிபடுத்தும் வகையில், இந்த சீரியலின் இயாக்குநரும் லொஸ்லியாவிற்கு வாய்ப்பு கொடுப்பேன் என்ற வகையில் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.

ஆனால், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், கவினும் குறித்த சீரியலில் கதநாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது, ராஜா ராணி தொடரின் இரண்டாம் பாகத்தில் கவின் – லொஸ்லியா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

இந்த தகவலை அறிந்த கவின்ஸ்லியா ரசிகர்கள், பிக்பாஸில் பிரித்து வைத்திருந்த இந்த ஜோடியை சீரியலில் காதலர்களாக, கணவன் மனைவியாக பார்க்க மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.