இலங்கையில் பிறந்து வெளிநாட்டில் வளர்ந்து சாதித்து வரும் இளம் பெண்! குவியும் பாராட்டுகள்!

இலங்கையில் பிறந்து, டென்மார்க்கில் குடிபெயர்ந்து தற்போது பல சாதனைகள் படைத்து வரும் நார்வினி டேரிக்கு பாராட்டுகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.

இலங்கை தமிழ் குடும்பத்தில் பிறந்தவர் நார்வினி டேரி. இவர் தன்னுடைய சிறு வயதிலே பெற்றோருடன் டென்மார்க்கிற்கு குடிபெயர்ந்தார்.

அங்கு பள்ளி மற்று கல்லூரி படிப்பை முடித்த இவர், மொடலிங்கில் அதிக ஆர்வம் இருந்ததால், பாடலாசிரியராக தன்னுடைய முதல் அடியை எடுத்து வைத்துள்ளார்.

அதன் பின் பின்னணி பாடகி, மியூசிக் ஆல்பங்களில் நடித்த இவர் பிரபலாமானார். இதைத் தொடர்ந்து டென்மார்க்கில் தயாரிக்கப்பட்ட உயிர்வரை இனித்தாய் என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இப்படம் டென்மார்க், கனடா, ஹாலாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியானது.

கடந்த 2016-ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சாதனை தமிழா என்ற விருது வழங்கும் விழாவில் இப்படம் 9 விருதுகளை வாங்கி குவித்தது.

நார்வே தமிழ்த் திரைப்பட விழாவிலும் உயிர்வரை இனித்தாய் படம் 2 விருதுகளை வென்றது. சிறந்த நடிகை என்ற விருதையும் நார்வினி வென்றார்

இதைத் தொடர்ந்து நார்வினி நடித்த சினம்கொள் என்ற படம் கல்கத்தா கல்ட் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த புதுமுகத் திரைப்படத்துக்கான விருதை வென்றது.

மேலும் இப்படம் 2019-ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. நார்வினி தற்போது மியூசிக் ஆல்பங்களையும் இயக்கி வருவதுடன், இலங்கையின் முதல் தமிழ் பெண் இயக்குனர் என்பது தான் பெருமை பட வேண்டிய விஷயம்.

இவர் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற மிஸ்யுனிவர்ஸ் டென்மார்க் அழகிப் போட்டியில் கலந்துகொண்டு இறுதிச்சுற்று வரை சென்றார். அதில், Best charity ambassador என்ற விருதை வென்று அசத்தினார்.

இப்படி பல விருதுகள், சாதனைகள் படைத்து வரும் நார்வினிக்கு சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.