இலங்கை தர்ஷன் பற்றி கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தும் மீரா! முகேனுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள் செய்த வேலை!

பிக் பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லை. பிக் பாஸ் வீட்டில் இருந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியேற்றப்பட்டவர் மீரா.

தற்போது தற்போது முகேன் மற்றும் தர்ஷன் தன்னை காயப்படுத்தியதாக கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவரின் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

“பிக்பாஸ் வீட்டில் சாண்டியை தவிர அனைவருமே எனக்கு எதிராக தான் இருந்தார்கள். என் மீது மிகவும் பொறாமைப்பட்டார்கள், எல்லா நேரமும் என்னை அவமானப்படுத்துவதும் தனிமைப்படுத்துவதுவுமாக இருந்தார்கள்.

அது என்னை ஒருபோதும் பாதிக்கவில்லை. முகேன் மற்றும் தர்ஷன் இரண்டு ஊமை மனிதர்கள் என்னை காயப்படுத்தத் தொடங்கினர், அவர்கள் வீட்டில் உள்ள அனைவராலும் கையாளப்படுகிறார்கள்.

பிக் பாஸ் இறுதிப் போட்டிக்குப் பிறகு கூட அனைவரும் சந்தித்த போது கூட, பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு ஆண்களும் என்னுடன் நிற்பதற்குப் பதிலாக என்னை துன்புறுத்தினர் என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் மீராவை திட்டி வருகின்றனர்.