திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி : கதறி அழுத கணவன்!!

புதுப்பெண்

தமிழகத்தில் உள்ள பாம்பர் அணையில் புதுமணத்தம்பதி உள்ளிட்ட குடும்பத்தார் செல்பி எடுத்த நிலையில் புதுப்பெண் உட்பட நான்கு பேர் தண்ணீரில் மூழ்கி உ யிரிழந்துள்ளனர். பெருமாள்சாமி (25) என்ற இளைஞருக்கும் நிவேதா (20) என்ற இளம்பெண்ணுக்கும் ஒரு மாதத்துக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இந்நிலையில் புதுமணத்தம்பதி மற்றும் குடும்பத்தார் கிருஷ்ணகிரியில் உள்ள பாம்பர் அணைக்கு அருகில் வசிக்கும் உறவினர்களை பார்க்க சென்றனர். அப்போது பாம்பர் அணைக்கு சென்ற அவர்கள் அங்கு தண்ணீருக்கு அருகில் நின்று கொண்டு கைகோர்த்தப்படி செல்பி எடுத்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக நிவேதா மற்றும் அவரின் உறவினர்களான சினேகா, கனிகா மற்றும் சந்தோஷ் ஆகியோர் தண்ணீரில் மூழ்கி உ யிரிழந்தனர். ஆனால் பெருமாள்சாமி அதிர்ஷ்சடவசமாக உ யிர் தப்பிய நிலையில் தனது 15 வயது தங்கை யுவராணியையும் காப்பாற்றினார்.

இதையடுத்து மனைவி மற்றும் உ யிரிழந்தவர்களின் ச டலங்களை பார்த்து பெருமாள்சாமி கதறி அழுதது அருகில் இருந்தோரை கலங்க வைத்தது. சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரித்து வரும் நிலையில் உலகிலேயே செல்பி எடுக்கும் போது உ யிரிழப்போரின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது.