நான் எப்போவும் உனக்காக காத்திருப்பேன்.. தர்ஷனுக்காக எழுதிய கடிதத்தை பற்றி மனம் திறந்த ஷெரின்!

BIGG BOSS

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்க இடம்பிடித்தவர் தான் ஷெரின். இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது இருந்தும், இறுதிவரையும், சென்றபோதும் அவரின் குணம் மாறமல் அனைவரிடமும் நல்ல நண்பராகவே பழகி வந்தார் ஷெரின். அதற்கு பிக்பாஸ் அவருக்கு விருதையும் அளித்திருந்தது.

இந்நிலையில் வெளியே வந்த ஷெரின், நேர்காணலில் சந்தித்து பேசிவருகிறார். அதில் தர்ஷனை பற்றியும், தர்ஷனுக்காக எழுதிய கடிதத்தை பற்றியும் பகிர்ந்துள்ளார் ஷெரின். எங்களுக்குள்ள என்ன பிரச்சினைகள் இருந்தாலும், நான் உனக்காக எப்போவும் இருப்பேன். உனக்கு என்ன தேவைப்பட்டாலும் என்னை தொடர்பு கொள்ளலாம் என பேசியுள்ளார்.

மேலும், லாஸ்லியா, நாங்க இரண்டும் பேரும் ஆரம்பத்தில் ஒதுங்கி தான் இருந்தோம். அதன் பின்பு கடைசி வாரத்தில் இருந்து தான் நாங்க நன்றாக பழகினோம். கவின் வெளியே போனதில் இருந்து அவங்க ரொம்ப மனசு உடைஞ்சு போய் இருந்தாங்க. அப்பதான் நான் உறுதுணையாக இருந்தேன் என கூறியுள்ளார்.