நெடுங்கேணிப் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டர் சைக்கிள் கோர விபத்து! குடும்பஸ்தர் பலி!

குடும்பஸ்தர்

வவுனியா வடக்கு நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பு பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்கு உள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலுப்பைக்குளம் பகுதியில் குறித்த நபர் பயணித்த மோட்டர் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயம் அடைந்த அவர் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தபோதிலும் சிகிக்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பட்டிக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கந்தையா உதயகுமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபருக்கு இரண்டு பிள்ளைகள் எனத் தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பில் நெடுங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.