பப்பில் சிம்புடன் நெருக்கமாக இருந்த தர்ஷனின் காதலி.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

image_pdfimage_print

தர்ஷனின் காதலி

பிக்பாஸில் கலந்துகொண்டு நம் மனதில் ஹீரோவாக நின்றவர்தான் இலங்கை தமிழனாகிய தர்ஷன். இவர்தான் பிக்பாஸ் சீசன் 3-ன் டைட்டலை ஜெயிப்பார் என அனைவரும் நினைத்தோம் ஆனால் 98 நாட்கள் இருக்கும் நிலையில் ஓட்டுகள் குறைவால் இவர் வெளியேறினார். இதுவே இவரது ரசிகர்களுக்கு பெரிய ஷாக்காக இருந்தது.

இப்படி இருக்க இவரை பிக்பாஸ் வீட்டிற்குள் ஷெரின் காதலித்து வந்தது அனைவருக்கும் தெரியும். ஆனால் இதற்கு முன்பே தர்ஷனை வெளியில் சனம் ஷெட்டி என்பவர் காதலித்து வருகிறார் என்று சனம் ஷெட்டியே பல இடங்களில் கூறியிருக்கிறார். இதற்கு பிறகு தர்ஷனின் சொந்தக்காரர் ஒரு தர்ஷன் யாரையும் காதலிக்கவில்லை என கூறினார்.

இதனை தொடர்ந்து இந்த விஷயத்துக்கு சனம் ஷெட்டி எதுவும் மறுப்பு தெரிவிக்காததால் அவர் கூறியது அனைவரும் உண்மை என்று நம்புகிறார்கள். இந்நிலையில் தற்போது சனம் ஷெட்டி சர்ச்சைகளின் மன்னனான சிம்புவிடம் பப்பில் நெருக்கமான ஒரு புகைப்படத்தை எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதில் சனம் ஷெட்டி சிம்புவைப்பற்றி கூறியுள்ளார். ‘நான் நிறைய நடிகர்களுக்கு ரசிகை ஆனால் நான் சிம்புவிற்கு மட்டும் தான் உண்மையான ரசிகை என்று கூறியுள்ளார். நான் பார்த்த மனிதர்களிலேயே நீங்கள் தான் சுத்தமான, தங்கமான மனிதர்’ என்று பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் சனம் ஷெட்டியை தர்ஷன் இல்லை! இப்பொது சிம்புவா என்று இணைத்தளங்களில் கலாய்த்து வருகின்றார்கள்.