மன்னிப்பு கேட்டார் பிக்பாஸ் லாஸ்லியா… உங்கள் அனைவரையும் இன்னமும் பெருமைப்படுத்துவேன்: லாஸ்லியா நெகிழ்ச்சி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை பெண் லாஸ்லியா முதல் முறையாக ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15 பிரபலங்களில் இலங்கையை சேர்ந்த லாஸ்லியாவும் ஒருவர், இவர் நிகழ்ச்சியினுள் வந்த முதல் நாளில் இருந்தே, ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

அதன் பின் இவர் வீட்டினும் கவீனுடன் பழகிய விதம் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, அவருடைய அப்பாவிற்கே கடும் கோபத்தை ஏற்படுத்தியது,

அதன் பின் அதிலிருந்து விலகில் விளையாட்டில் கவனம் செலுத்தினார், பிக்பாஸ் போட்டியில் 3-வது ரன்னராக அறிவிக்கப்பட்டார்.

வெளியில் வந்த அவர் இதுவரை எந்த ஒரு பேட்டியோ, சமூகவலைத்தளங்களில் இதைப் பற்றி பதிவோ எதுவும் போடாமல் இருந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் தன்னுடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், முதலில் நான் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு ஆதரவளித்து அளவு கடந்த அன்பைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. என்னைப் பொறுத்தவரையில் நன்றி என்பது மிகச் சிறிய வார்த்தைதான். அது அனைவருக்கும் போதுமானதாக இருக்காது.

நான் ரொம்ப ரொம்ப உங்களை நேசிக்கிறேன். எனக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு ஆச்சர்யமாக உள்ளது. நான் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இல்லாததற்கும், கேள்விகளுக்கு பதிலளிக்காததற்கும் மன்னிக்கவும். சத்தியமாக நிச்சயமாக உங்கள் அனைவரையும் சந்தோசப்படுத்துவேன். பெருமைப்படுத்துவேன். ஐ லவ் யூ சோ மச் என்று கூறியுள்ளார்.

மேலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த லாஸ்லியா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களை நேரில் சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.