முகம் சுளிக்கும் வகையில் சாண்டியின் புகைப்படத்தை வெளியிட்ட கவின்.. அதிர்ந்த பிக்பாஸ் ரசிகர்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சி 105 நாட்களை கடந்து ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டு நிறைவு பெற்றது.

இந்நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தங்கள் நண்பர்கள் குழுவுடன் அவரவர்கள் வீட்டிற்கு சென்று தங்களது நட்பை வளர்த்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, சேரன் தனது நண்பர்களான வனிதா, பாத்திமா பாபு, ஷெரின், சாக்‌ஷி ஆகியோர்களை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க, சாண்டி தனது பிக்பாஸ் நண்பர்களான கவின், தர்ஷன், முகேன் ராவ், அபிராமி மற்றும் லாஸ்லியாவை தனது வீட்டிற்கு அழைத்துக்கொண்டு விருந்து வைத்துள்ளார்.

இந்நிலையில், கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாண்டியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது குறித்த புகைப்படம் தான் செம வைரலாக பேசப்பட்டு வருகிறது.

அதில் சாண்டி பின்பக்கமாக நின்றுகொண்டு சிறுநீர் கழிப்பது போல போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டீசன்கள் இணையத்தில் சாண்டியை சிலர் திட்டிவருகின்றனர்.

சாண்டி இதனை ஜாலிக்காக செய்துள்ளார் என்பதே உண்மை. ஆனால் இது பலருக்கும் முகம் சுளிக்கும் வகையில் இருப்பதாக கூறிவருகின்றனர்.