முதல் முறையாக சந்தித்து கொண்ட 4 மணி நேரத்திற்குள் திருமணம் செய்து கொண்ட ஜோடி… வெளியான புகைப்படம்!

இந்தியாவில் ஒரு ஆணும், பெண்ணும் தாங்கள் முதல் முறையாக சந்தித்து கொண்ட 4 மணி நேரத்துக்குள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவை சேர்ந்த சுதிப் கோஷல் என்ற இளைஞரும், பிரித்மா பானர்ஜி என்ற இளம்பெண்ணும் பேஸ்புக் மூலம் நட்பானார்கள்.

இருவர் மனதிலும் ஒருவர் மீது ஒருவருக்கு காதல் இருந்த போதிலும் அவர்கள் வெளிகாட்டவில்லை.

அதே போல இருவரும் நேரில் சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பு அமையாமல் இருந்தது.

இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று அங்குள்ள ஒரு கோவிலில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தது.

அங்கு சுதிப்பும், பிரித்மாவும் யதேச்சியாக வந்த போது ஒருவரையொருவர் முதல் முறையாக சந்தித்து கொண்டனர்.

பின்னர் இருவரும் மனம் விட்டு பேசிய போது சுதிப், பிரித்மாவிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.

இதையடுத்து இருவரும் வீடியோ கால் மூலம் சில மணி நேரம் தனித்தனி இடத்துக்கு சென்று பேசினார்கள்.

சுதிப்பும், பிரித்மாவும் சந்தித்து நான்கு மணி நேரம் கூட ஆகாத நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

அதன்படி கோவிலில் வைத்தே பிரித்மா நெற்றியில் குங்குமம் வைத்து சுதிப் மனைவியாக ஏற்று கொண்டார்.

இவர்களின் திருமணத்தை இருவீட்டாரும் ஏற்று கொண்டுள்ளனர்.

இது குறித்து சுதிப் கூறுகையில், எனக்கு சம்பிரதாயத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை, எனக்கு பிடித்த கடவுள் முன்னிலையில் அவள் நெற்றியில் குங்குமம் வைத்து மனைவியாக ஏற்று கொண்டதே எனக்கு திருப்தியளிக்கிறது என கூறியுள்ளார்.

பிரித்மா கூறுகையில், நாங்கள் கோவிலில் சந்தித்து கொள்வோம் என கனவிலும் நினைக்கவில்லை, இது தற்செயலாக நடந்ததா அல்லது தெய்வத்தின் விருப்பமா என தெரியவில்லை என கூறியுள்ளார்.

தற்போது இந்த தம்பதிகள் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.