13-10-2019 முதல் 19-10-2019 வரை இந்த வார ராசிப்பலனில் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி என்பதை பார்ப்போம்.

மேஷம்: செவ்வாய், சூரியன், ராகு, சந்திரன் அதிர்ஷ்ட பலன்களை தருவர். தாய்வழி உறவினர் அன்பு, பாசத்துடன் உதவுவர்.
குடும்ப தேவை தாராள பண செலவில் நிறைவேறும். வீடு, வாகனத்தில் விரும்பிய மாற்றம் செய்வீர்கள். புத்திரர் நண்பர்களின் உதவியால் முன்னேற்றம் காண்பர். நோய் தொந்தரவு குறைந்து உடல் ஆரோக்கியம் கூடும். மனைவியின் ஆர்வமிகு செயல் குளறுபடியாகலாம். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி செய்வீர்கள். பணியாளர்கள் கூடுதல் தொழில் நுட்பம் அறிந்து கொள்வர். பெண்கள் பிரார்த்தனை நிறைவேறி தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து நண்பருக்கும் உதவுவர்.
பரிகாரம் : ராமர் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்: சந்திரன், புதன், குரு அளப்பரிய நற்பலன் வழங்குவர். தெளிந்த சிந்தனையுடன் பணிபுரிவீர்கள். பண வரவும் நன்மையும் அதிகரிக்கும்.
உடன் பிறந்தவர்கள் அதிக அன்பு, பாசம் கொள்வர். புத்திரர் படிப்பு, வேலை திறனில் மேம்படுவர். பூர்வ சொத்தில் பணவரவு அதிகரிக்கும். நோய் தொந்தரவு விலகும். மனைவி கருத்திணக்கம் கொள்வார். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். தொழில், வியாபாரம் புதியவர்களின் ஆதரவில் செழித்து வளரும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் குடும்ப நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் படிப்பு தவிர பிற விவாதம் பேச வேண்டாம்.
பரிகாரம் : விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

மிதுனம்: சந்திரன், சுக்கிரன் அனுகூல பலன் தருவர். நண்பரின் ஆலோசனை மன குழப்பம் தீர உதவும்.
வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். புத்திரர் பெற்றோர் சொல்லை வேதமென கருதுவர். உடல் ஆரோக்கியம் பலம் பெற சத்தான உணவு உண்டு மகிழ்வீர்கள். பண கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவி வழி சார்ந்த உறவினர்கள் அதிக அன்பு பாராட்டுவர். குடும்ப தேவை பெருமளவில் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் பண வரவு அளவுடன் இருக்கும். பணியாளர்கள் அக்கறையுடன் பணி புரிவர். பெண்கள் தாய் வீட்டு உதவியை கேட்டு பெறுவர். மாணவர்கள் படிப்பு தவிர பிற விவாதம் பேச வேண்டாம்.
பரிகாரம் : குரு வழிபாடு சுப வாழ்வு தரும்.

கடகம்: பெரும்பான்மை கிரகங்கள் அனுகூல அமர்வில் உள்ளன. சமூகத்தில் பெற்ற நற்பெயரை பாதுகாத்திடுவீர்கள்.
உடன் பிறந்தவர்களால் உதவி கிடைக்கும். குடும்ப தேவை ஓரளவு நிறைவேறும். புத்திரர் படிப்பு, வேலையில் முன்னேற நல்ல ஆலோசனை சொல்வீர்கள். மனைவியின் அன்பு, பாசம் நெகிழ்ச்சியை தரும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க புதிய வழி பிறக்கும். பணியாளர்கள் எளிதாக பணி இலக்கு நிறைவேற்றுவர். வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும். பெண்கள் விரும்பிய பொருட்கள் வாங்கி மகிழ்வர். மாணவர்கள் படிப்பில் சிறந்த தேர்ச்சி பெறுவர்.
பரிகாரம் : சாஸ்தா வழிபாடு இடர் நீக்கும்.

சிம்மம்: ராகு, சுக்கிரன், சந்திரன் வியத்தகு நற்பலன் வழங்குவர். பழகுபவர்களிடம் இதமாக பேசுவீர்கள்.
சமூக நிகழ்வு புதிய அனுபவம் தரும். வீடு, வாகனத்தில் உரிய பாதுகாப்பு வேண்டும். புத்திரரின் ஆர்வமிகு செயல்களை இதமாக சரி செய்ய வேண்டும். பூர்வ சொத்தில் ஓரளவு வருமானம் கிடைக்கும். மனைவியின் கருத்துகளை ஏற்று கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகி வளர்ச்சி கூடும். பணியாளர்கள் நிர்வாகத்திடம் நன்மதிப்பு பெறுவர். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற புதிய பயிற்சி பின்பற்றுவர்.
சந்திராஷ்டமம் : 13.10.19 காலை 6:00 மணி – 14.10.19 காலை 11:32 மணி
பரிகாரம் : முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.

கன்னி: சுக்கிரன், சந்திரன் மட்டுமே ஓரளவு நற்பலன் தருவர். செயல்களில் புதிய பரிமளிப்பு ஏற்படும். சமூக பணியில் ஈடுபாடு கொள்வீர்கள்.
வெளியூர் பயணம் அதிகரிக்கும். புத்திரர் படிப்பு, வேலையில் முன்னேற்றம் பெறுவர். பகைவரால் உருவான தொல்லை விலகும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். மனைவி கருத்திணக்கம் கொள்வார். தொழிலில் போட்டியை சமாளித்து முன்னேற்றம் பெறுவீர்கள். பணியாளர்கள் கூடுதல் வேலை வாய்ப்பை ஏற்று கொள்வர். பெண்கள் பண செலவில் சிக்கனம் பின்பற்றுவர். மாணவர்கள் படிப்பில் முன்னேற நண்பர் உதவுவர்.
சந்திராஷ்டமம் : 14.10.19 காலை 11:33 மணி – 16.10.19 இரவு 8:50 மணி
பரிகாரம் : பைரவர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

துலாம்: கேது, குரு, சுக்கிரன், சனீஸ்வரர் அதிர்ஷ்டகரமான பலன் வழங்குவர். மனதில் ஆன்மிக சிந்தனை வளரும்.
தாயின் அன்பு, ஆசி கிடைக்கும். புதிய அணுகுமுறையால் பணிகளை நிறைவேற்றுவீர்கள். சிலர் புதிய வீடு, பணியிடம் மாறுவர். புத்திரர் படிப்பு வேலையில் சிறப்பிடம் பெறுவர். எதிரியால் இருந்த தொந்தரவு குறையும். மனைவியின் நற்செயல் குடும்பத்தில் ஒற்றுமையை வளர்க்கும். தொழில், வியாபாரத்தில் ஆதாய பண வரவு கிடைக்கும். பணியாளர்கள் பணியிலக்கை எளிதில் நிறைவேற்றுவர். பெண்கள் சுப நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்பர். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.
சந்திராஷ்டமம் : 16.10.19 இரவு 8:51 மணி – 19.10.19 அதிகாலை 4:06 மணி
பரிகாரம் : சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

விருச்சிகம்: சுக்கிரன், சூரியன், செவ்வாய், சந்திரனால் அளப்பரிய நன்மை கிடைக்கும். பணியில் இருந்த குறுக்கீடு விலகும்.
உடன் பிறந்தவர் அதிக அன்பு பாராட்டுவர். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். புத்திரர் படிப்புடன் பொது அறிவு விஷயங்களும் அறிந்து கொள்வர். மனைவியின் அன்பு, பாசம் மனதில் உத்வேகம் தரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற பெரிய அளவில் உதவி கிடைக்கும். பணியாளர்களுக்கு முன்னேற்றமான வாழ்க்கை முறை உருவாகும். பெண்கள் தாய் வீட்டுக்கு உதவுவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து பரிசு, பாராட்டு பெறுவர்.
சந்திராஷ்டமம் : 19.10.19 அதிகாலை 4:07 மணி – 19.10.19 நாள் முழுவதும்
பரிகாரம் : பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.

தனுசு: சுக்கிரன், புதன், சூரியன், சந்திரனால் சுப பலன் உண்டாகும். நண்பரின் உதவி மனதில் நம்பிக்கையை வளர்க்கும்.
தாய் வழி உறவினர்களின் செயல், புரியாத புதிர் போல இருக்கும். பூர்வ சொத்தில் ஓரளவு பணவரவு கிடைக்கும். புத்திரர் பெற்றோரின் எண்ணங்களை உணர்ந்து நடந்து கொள்வர். உடல் ஆரோக்கியம் மேம்பட சத்தான உணவும், சீரான ஓய்வும் அவசியம். மனைவியின் ஆலோசனை குடும்பத்தின் எதிர் கால நலனுக்கு உதவும். வெளியூர் பயணத்தில் பாதுகாப்பு அவசியம். தொழில், வியாபாரம் புதியவர்களின் ஆதரவில் செழித்து வளரும். பணியாளர்கள் சிறப்பாக பணி புரிந்து நற்பெயர் பெறுவர். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் வேண்டும்.
பரிகாரம் : துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

மகரம்: புதன், குரு, ராகு, சந்திரன் ராஜயோக பலன் தருவர். மனதில் கலை ரசனை அதிகரிக்கும். பணிகளில் புதிய பரிமளிப்பு ஏற்படும்.
புத்திரரின் தேவையை நிறைவேற்றுவீர்கள். எதிர் மனப்பாங்கு உள்ளவரும் நல் அன்பு பாராட்டுவர். உறவினர்களின் வருகை வீட்டில் மகிழ்ச்சியை தரும். மனைவியின் நல்ல பணிகளை பாராட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் தொழில் நுட்பம் அறிந்து எளிதாக பணிபுரிவர். பெண்கள் நேரத்தின் அருமையை உணர்ந்து செயல்படுவர். மாணவர்கள் படிப்பில் லட்சிய மனதுடன் ஈடுபடுவர்.
பரிகாரம் : ஆஞ்சநேயர் வழிபாடு வெற்றியளிக்கும்.

கும்பம்: சுக்கிரன், கேது, சந்திரன், சனீஸ்வரரால் நன்மை வந்து சேரும். சமூக நிகழ்வுகள் மகிழ்ச்சி தரும். வாழ்வில் முன்னேற புதிய வாய்ப்பு உருவாகும்.
தாராள பண செலவில் குடும்ப தேவை பூர்த்தியாகும். வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும். புத்திரரின் செயல் சிறப்பாக அமைந்திடும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவியின் பேச்சும் செயலும் மகிழ்ச்சியை தரும். உறவினர்கள் மதிப்பு, மரியாதை தருவர். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்யவும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்ட திட்டம் தவறாமல் பின்பற்ற வேண்டும். பெண்கள் நிம்மதி நிறைந்த வாழ்வு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து பரிசு பெறுவர்.
பரிகாரம் : சிவன் வழிபாடு சகல நன்மை தரும்.

மீனம்: குரு, சுக்கிரன், புதன், சந்திரன் வியத்தகு அளவில் நற்பலன் வழங்குவர். தாயின் அன்பு, ஆசி கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.
வாகனத்தின் பயன்பாடு திருப்திகரமாகும். புத்திரர் அறிவாற்றல், செயல் திறனில் மேம்படுவர். பண கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். ஆரோக்கியம் உணர்ந்து விருந்தில் பங்கேற்கலாம். மனைவியின் யோகத்தினால் குடும்பத்திற்கு சில நன்மை வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறைந்து வளர்ச்சியை ஏற்படுத்தும். பணியாளர்கள் கடமையுணர்வுடன் பணி புரிவர். பெண்கள் நற்செயல்களால் பெருமை சேர்த்திடுவர். மாணவர்கள் ஞாபக திறன் வளர்த்து படிப்பில் முன்னேறுவர்.
பரிகாரம் : அம்பிகை வழிபாடு நல்வாழ்வு தரும்.
