பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த தர்ஷன் தற்போது எங்கு சென்றுள்ளார் தெரியுமா?.. வைரலாகும் புகைப்படம்..!

image_pdfimage_print

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் இலங்கையில் இருந்து வந்து போட்டியாளராக கலந்துகொண்டவர் தான் தர்ஷன்.

தர்ஷனின் நல்ல குணங்களையும், ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்ததாலும், பிக்பாஸ் போட்டிகளில் சிறந்து விளங்கியதாலும், பிரச்சினைகளில் தேவையான நேரத்தில் தட்டி கேட்டதாலும் என பல குணங்களில் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தார் தர்ஷன்.

மேலும், இவர் தான் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல வேண்டும் என்று போட்டியாளர்கள் மட்டுமின்றி, ரசிகர்களும் ஆர்பரித்தனர். ஆனால் சமீபத்தில் தர்ஷன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெளியேறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தர்ஷன் தங்கை மற்றும் நண்பர்களுடன் சூர்யா நடித்துள்ள காப்பான் படத்திற்கு சென்றுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.