லெட்டருக்கு பதில் சொன்னாரா தர்ஷன்: உண்மையை உடைத்த ஷெரின்!

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய ஷெரின் தர்ஷன் குறித்து மனம் திறந்துள்ளார்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இறுதி போட்டிக்கு 4 பேர் தேர்வான நிலையில் முகின் ராவ் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர்.

மற்ற சீசன்களை காட்டிலும் பிக் பாஸ் சீசன் 3 மிகவும் சிறப்பாக இருந்ததாக பலரும் கூறி வருகின்றனர். குறிப்பாக இந்த சீசனில் கவின் -லாஸ்லியா காதல் , ஷெரின் – தர்ஷன் இடையேயான உறவு என பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதில் ஷெரினுக்கு தர்ஷன் மீது ஈர்ப்பு இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் இருந்து வந்தார். ஒருகட்டத்தில் தர்ஷனுக்கு ஷெரின் கடிதம் எழுதும் அளவிற்கு சென்றதும், அதை தர்ஷன் குப்பை தொட்டியிலிருந்து எடுத்து படித்தது என விறுவிறுப்பாகச் சென்றது. ஒருகட்டத்தில் தர்ஷன் வெளியேற அந்த கடிதத்திற்கு வெளியில் வந்து பதில் கூறுகிறேன் என்று சொல்லியிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் இணையதள ஊடகத்திற்குப் பேட்டியளித்த ஷெரினிடம் தர்ஷன் பற்றி கேள்வி எழுப்ப, பிக் பாஸ் வீட்டில் தர்ஷனுக்கு நான் எழுதிய கடிதத்தை தர்ஷன் படித்துவிட்டான். வெளியே வந்த பிறகு அதற்கு பதில் சொல்வதாகக் கூறியிருந்தான்.

ஆனால் நான் அவரிடம் பேச முயற்சி செய்யவில்லை. அதேபோல் அவரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. அவரின் தனிப்பட்ட வாழ்வில் நான் எந்த பிரச்னையையும் செய்யக்கூடாது என்று நினைக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.