தர்ஷனுக்கு ரசிகர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. பூரித்துபோன தர்ஷன் வெளியிட்ட புகைப்படம்..!

தர்ஷன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் வெற்றிநாயகனாக வலம் வந்தவர் தான் தர்ஷன். ஆனால் அவர் பிக்பாஸ் டைட்டிலை வெல்லவிட்டாலும், ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் என்ற பெருமைக்கு சொந்தகாரர் ஆகிவிட்டர். அப்படி அவருக்கு ரசிகர்கள் அன்பை பொழிந்து வருகிறார்கள்.

மேலும், வெளியே வந்த பின் தர்ஷன் போட்டியாளர்களுடனும், ரசிகர்களுடனும் பல புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தர்ஷனுக்கு ரசிகர்கள் தற்போது பல கிஃப்ட்களை பரிசாக அளித்துள்ளார்கள். அதை அனைத்தையும், புகைப்படம் எடுத்து தன் ட்விட்டர் பக்கத்தில் நன்றியை தெரிவித்துள்ளார். இந்த சமீபத்திய புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.