பிக்பாஸ் கொண்டாட்டத்தில் கவின் பாடலுக்கு நடனமாடும் லாஸ்லியா! இணையத்தில் லீக்கான காட்சி..!

லாஸ்லியா

பிக்பாஸ் கொண்டாட்டத்தில் கவின் பாடலுக்கு லாஸ்லியா நடனமாடும் தகவலால் அவர்களின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவினும் லாஸ்லியாவும் காதலித்து வருகின்றனர். லாஸ்லியாவின் காதலுக்கு அவரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தனது பெற்றோர் காதல் திருமணம் செய்தவர்கள்தான், அவர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வேன் என தீர்க்கமாக உள்ளார் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கேம் சேஞ்சர் விருது பெற்ற கவினை, மை கேம் சேஞ்சர் எனக்கூறி டிவிட்டியிருந்தார் லாஸ்லியா.

ஆனால் கடந்த சில நாட்களாக லாஸ்லியா, கவினுடன் பேசுவதில்லை. இதனால் கவின் சோகமாக இருக்கிறார் என தகவல் பரவி வந்தது

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சிக்கான ஒத்திகை பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் லாஸ்லியா, கவின் பாடிய அடியே லாஸ்லியா பாடலுக்கு நடனமாடுகிறார்.

இதன் ரிகர்சல் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் லாஸ்லியா. இதனை பார்த்த கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அந்த ரிகர்சல் வீடியோவை ஏராளமானோர் லைக் செய்திருக்கின்றனர். பலர் தங்களின் பக்கங்களிலும் அதனை ஷேர் செய்து வருகின்றனர்.

மேலும் பலர் இந்த பாடலின் பர்ஃபாமன்ஸை பார்க்கவே பிக்பாஸ் கொண்டாட்டத்தை காண காத்திருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்.