பிக்பாஸ் வீட்டில் என்னை நிறையபேர் காதலிக்கிறேனு சொன்னாங்க.. வீடியோ வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய மீராமிதுன்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் மொடல் அழகி மீராமிதுன்.

பிக்பாஸ் வீட்டில் எழுந்த பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்தவர் மீராமிதுன்.

இவர், பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முதல் தினத்திலிருந்தே அபிராமி, சாக்‌ஷி இவரை டார்கெட் செய்து சண்டையிட்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டில் பல பிரச்சனைகள் எழுந்தது. இதனால் மக்கள் மத்தில் வெறுப்புகளை சம்பாதித்தார் மீராமிதுன்.

பின்பு, சேரன் தன் மீது ஆபாசமாக கை வைத்தார் என்று பெரும் குற்றச்சாட்டை வைத்த மீராமிதுன், மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பிற்கும் ஆளாகிய நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேவந்த மீராமிதுன், சில தினங்களாக பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அதில், அபிராமியை ஜெயிலுக்கு அனுப்புவதாகவும், அதற்கு அதாரம் தன்னிடம் இருப்பதாகவும் கூறி பெரும் சர்ச்சயை எழுப்பினார்.

இதைத்தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டிற்கு இரண்டாவது முறையாக, அதாவது சிறப்பு விருந்தினராக மீரா மிதுன் சென்ற சமயத்தில் ஆடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது.

அந்த ஆடியோவில், முகென் மற்றும் நானும் நெருக்கமாக இருப்பது போல விடியோவை தயார் செய்து அதற்கு பின்னால் முகென் பாடிய பாடல்களை போடுங்கள். நானும் முகேனும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை எடுத்து போடுங்கள்.

இதை சரியாக செய்தால் உங்களுக்கு பணம் தருகிறேன் என்று மீரா, தனது நண்பருடன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியிருந்தது.

இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு ஆடியோ குறித்து விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மீராமிதுன்.

அதில், அந்த ஆடியோவில் பேசியது நான் இல்லை என்றும் நான் பல இடங்களில் பேசியதை ஒன்றாக இணைத்து நான் பேசியது போல சித்தரித்துள்ளார்கள் என்றும். பிக் பாஸ் வீட்டில் இருந்த போது முகெனுக்கும் எனக்கும் என்ன நடந்தது என்று தெரிந்தால் அவருடைய பெயர் தான் கேட்டிருக்கும் அவர் பட்டத்தை வெல்லவும் அது தடையாக இருந்திருக்கும், அதை எல்லாம் மறைத்து நான் பழியை சுமந்தேன் என்று மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார் மீரா.

மேலும், பிக்பாஸ் வீட்டில் என்னை நிறைய பேர் காதலித்தார்கள், பெரிய லிஸ்ட் இருக்கிறது. அதை வெளியே கூற வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.