யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி!

கோர விபத்து!

அச்சுவேலி, இராச வீதி பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

நவகிரி, புத்தூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பீ.நிரோஜன் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டாடர் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.