பிரபல டிவியில் ஒளிபரப்பான தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி சில ஆண்டுகளாகவே மக்களிடையே அதிக வரவேற்பையும் ஆதரவையும் பெற்று வருகிறது.

கடந்த இரண்டு சீசன்களையும் விட மூன்றாவது சீசன் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

அதற்கு ஒரு விதத்தில் ஈழத்தமிழர்கள் தான் காரணம் என்றே கூறவேண்டும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மக்களிடையே அதிக அன்பும், ஆதரவையும் பெற்றவர்கள்.

அதிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் தர்ஷன் மற்றும் லொஸ்லியா என்று தான் கூற வேண்டும்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் அவர்கள் பேசியது இலங்கை தமிழா? யார் பேசியது உண்மையான இலங்கை தமிழ் என்ற ஒரு கேள்வி இலங்கையர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனை இலங்கை இளைஞர் ஒருவர் காணொளியில் விலக்கியுள்ளார்.
