ஜேர்மனியில் தங்க கார் ஓட்டிவந்த நபர்: பொலிசார் அதிரடி!

image_pdfimage_print

ஜேர்மனியில் தங்க நிற கார் ஒன்றை ஓட்டிவந்த ஒருவரை தடுத்து நிறுத்திய பொலிசார் காரை பறிமுதல் செய்தனர்.

ஜேர்மனியின் Düsseldorf நகர பொலிசார், பளிச்சென தங்க நிறத்தில் சாலையில் பயணித்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தினர்.

அது மிகவும் பளிச்சென இருப்பதால், மற்ற வாகன சாரதிகளுக்கு கண் கூசும் என்பதால் அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.

சூரிய ஒளியையும் மற்ற ஒளிகளையும் அந்த கார் பயங்கரமாக பிரதிபலிப்பதைக் கண்ட பொலிசார், அதை தடுத்தி நிறுத்தியபோது, அதன் நிறத்தையும் தாண்டி வேறு சில பிரச்னைகள் அதில் இருப்பதையும் கண்டறிந்தனர்.

அந்த SUV காரில், அதன் உரிமையாளர் சில மாற்றங்களை செய்திருந்தார். ஒரு நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு வாகனத்தில் அனுமதியின்றி மாற்றங்கள் செய்வது பல நாடுகளில் குற்றமாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

காரை கைப்பற்றிய பொலிசார், அது சாலையில் செலுத்துவதற்கு உகந்த கார் அல்ல என்று கூறி, அந்த காரை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க மறுத்ததால், அவர் வீட்டுக்கு நடந்தே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அந்த கார், சாலையில் பயணிக்க தகுதியானதுதானா என்பதை உறுதி செய்வதற்காக நிபுணர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.