முல்லைத்தீவில் இராணுவத்தினரின் வாகனத்துடன் உந்துருளி மோதி விபத்து ! படுகாயமடைந்த இளைஞன் ஆபத்தான நிலையில்.

image_pdfimage_print

முல்லைத்தீவு

முல்லைத்தீவு- கொக்காவில் பகுதியில் இராணுவத்தினாின் வாகனம் மோதியதில் பொதுமகன் ஒருவன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றாா்.

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதியின் கொக்காவில் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஒரே திசையில் பயணித்த நிலையில் மோட்டார் சைக்கிள் மீது ரக் மோதியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தெரியப்படுத்தியும் குறிப்பிட்ட நேரத்திற்குள் சம்பவ இடத்திற்கு பொலிசார் வருகை தரவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மோட்டார் சைக்கிளை முந்தியவாறு

சமிக்ஞையை ஒளிரவிடாது இராணுவ முகாமிற்குள் ரக் வாகனத்தை செலுத்த முற்பட்டபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தை அவதானித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.