இன்றைய ராசிபலன் 18.10.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.

இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம்: உற்சாகமான நாளாக அமையும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வழிபடுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

ரிஷபம்: எதிர்பாராத பணவரவு கிடைக்கும். புதிய ஆடைகள் அணிந்து மகிழ்வீர்கள். புதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். வெளியில் செல்லும்போது கவனமாக இருக்கவும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிள்ளைகள் வழியில் பெருமை உண்டாகும்.

மிதுனம்: உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படுவீர்கள். தாயின் அன்பும் ஆதரவும் உற்சாகம் தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மகான்களின் அதிஷ்டானங்களுக்குச் சென்று தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

கடகம்: மிகவும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பாராத மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகவே இருக்கும். வெளியில் செல்லும்போது கவனமாக இருக்கவும். மாலையில் நீண்டநாள்களாக சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

சிம்மம்: முயற்சிகள் அனைத்தும் சாதகமாக முடியும். சகோதரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். உற்சாகமான நாள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கன்னி: உற்சாகமாகக் காணப்படுவீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குருவருள் பூரணமாக இருப்பதால் காரியங்களில் வெற்றி உண்டாகும். சிலருக்கு மகான்களைத் தரிசித்து அவர்களின் ஆசிகளைப் பெறும் வாய்ப்பு உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது அவசியம்.

துலாம்: தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். பிள்ளைகள் வழியில் பெருமைப்படும் செய்தி கிடைக்கும். சிலருக்கு திடீர்ப் பயணங்களால் செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.

விருச்சிகம்: எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மாலையில் குடும்பத்துடன் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று வருவீர்கள். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

தனுசு: உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். முக்கிய பிரமுகர்களின் நட்பும் அவர்களால் நன்மையும் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மாலையில் உறவினர்கள் வருகை உற்சாகம் தருவதாக அமையும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட யோகம் உண்டாகும்.

மகரம்: குரு கடாட்சம் பரிபூரணமாகக் கிடைக்கும் நாள். ஆனாலும் புதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம். சிலருக்குப் புண்ணிய தலங்களுக்குச் சென்று வழிபடும் பாக்கியம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் சற்று குறைவாகத்தான் கிடைக்கும். வீட்டில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

கும்பம்: இன்று உற்சாகமான நாளாக இருக்கும். ஆனாலும், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். தீபாவளி பட்டாசு வெடிக்கும்போது கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். தாய்மாமனிடம் எதிர்பார்த்திருந்த காரியம் இன்று அனுகூலமாக முடிவதற்கு வாய்ப்பு உண்டு. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மீனம்: மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவு தருவார். சிலருக்கு வாகன யோகம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.