தன்னை சீர ழித்த நடிகரை அம்பலப்படுத்திய பிரபல நடிகை… தமிழ் சினிமாவில் காத்திருக்கும் மிகப் பெரிய சர்ச்சை!

image_pdfimage_print

ஆண்ட்ரியா

பிரபல திரைப்பட நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா தன்னை ஏமாற்றி சீர ழித்த நடிகரின் பெயரை அவருடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதால், அவருக்கு மிர ட்டல் வர வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பாடகியாக வலம் வந்த ஆண்ட்ரியா அதன் பின் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்தார். இடையில் அவ்வப்போது காணமல் போகும் இவர், திடீரென்று ப்ரோக்கன் விங்க் என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தார்.

அப்போது அந்த புத்தகத்தில் சோகமான வரிகள் இடம்பெற்றிருப்பதைப் பார்த்த இணையவாசிகள் ஆன்ட்ரியாவிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஆன்ட்ரியா, திருமணமான நடிகர் ஒருவருடன் ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும், ஆனால் அந்த நடிகர் தேவை முடிந்தவுடன் தன்னை நிராகரித்துவிட்டு சென்றதாகவும், அந்த நடிகரால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், கஷ்டங்களை அனுபவித்து அதிலிருந்து மீண்டுவர தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து இணையவாசிகள் அந்த நடிகர் யார் என்று தொடர்ந்து கேள்வி கேட்க, அதற்கு பதிலளிக்கும் விதமாக அந்த புத்தகத்தில் தன்னை ஏமாற்றிய நடிகர் குறித்தும் அவரது பெயரையும் குறிப்பிட்டி எழுதியுள்ளதாக தற்போது ஆன்ட்ரியா தெரிவித்துள்ளார்.

அந்த நடிகர் ஒரு அரசியல் குடும்பத்தின் வாரிசு என்று குறிப்பிட்டுள்ளார். அந்த புத்தகத்தை முழுவதுமாக ஆண்ட்ரியா இன்று தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட இருப்பதாக கூறியுள்ளதால், கண்டிப்பாக தமிழ் சினிமாவில் ஒரு புதிய சர்ச்சை வெடிக்கும் என்று கூறப்படுகிறது.

அதோடு அந்த நடிகர் பெரிய அரசியல் கட்சியின் குடும்ப வாரிசு என்று ஆண்ட்ரியா கூறியுள்ளதால், இந்த புத்தகத்தை எப்படியும் அவர்கள் வெளியிட விட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.