மாற்றுத்திறனாளிகளின் மாத கொடுப்பனவு 10,000 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும் பிரதமரிடம் DATA கோரிக்கை!

மாற்றுத்திறனாளிகளின் மாத கொடுப்பனவு 10,000 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும் பிரதமரிடம் DATA கோரிக்கை

மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் மாற்றுத்திறனாளிகளான முள்ளந்தண்டுவம் பாதிக்கப்பட்டோர், இரண்டு கைளையும் இழந்தோர், இரண்டு கண்களையும் முற்றாக இழந்தோருக்கான மாதாந்த கொடுப்பனவுகளாக மாதம் 10,000 ரூபாய் அளவில் அரசு வழங்க வேண்டும் என்று DATA அமைப்பு பிரதமரிடம் கோரிக்கை விடுத்தது.

அதேவேளை உழைக்கும் மாற்றுத்திறனாளிகள், உழைக்கும் பெண்தலமைத்துவ குடும்பத்தை சேர்ந்தோரது தொழிலை விருத்தி செய்வதற்கான உதவியையும் அரசு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் பிரதமருடனான மக்கள் சந்திப்பின் கலந்து கொண்ட DATA அமைப்பினர்கள் இந்த கோரிக்கையை விடுத்ததோடு சுயமதிப்பீட்டு மாநாட்டின் பிரதியையும் அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருந்த சிறு குறிப்பு அடங்கிய கடிதத்தினையும் கையளித்திருந்தனர்.

பிரதமரிடம் அளிக்கப்பட்ட கடிதத்தின் பிரதியும் இத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.