இலங்கையில் இருக்கும் லொஸ்லியா! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஈழத்து ரசிகர்கள்… லீக்கான காட்சி!

பிக் பாஸ் கொண்டாட்டங்களை முடித்து விட்டு லொஸ்லியா நாடு திரும்பியுள்ளதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது.

இதனால், தமிழக ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளனர். அது மாத்திரம் இன்றி, ஈழத்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதேவேளை, பல்வேறு சோதனைகளை கடந்து சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தியாவுக்கு சென்று பிக் பாஸில் கலந்து கொண்ட லொஸ்லியா அழகான பேச்சாலும், குறும்பு தனத்தினாலும் பல்வேறு ரசிகர்களை தன் வசப்படுத்தி பிக் பாஸில் மூன்றாம் இடத்தினை பிடித்திருந்தார்.

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும் அவர் அவராகவே இருந்துள்ளார். இந்நிலையில் லொஸ்லியா இனி வரும் காலங்களில் வெள்ளித்திரையிலும் தடம் பதிக்க உள்ளதாக கூறப்படுகின்றது.