லாஸ்லியா விஷயத்தில் இனி தலையிடமாட்டேன்… அசிங்கமாக பேசாதீங்க! மெளனம் கலைத்த சேரன்!

பிரபல திரைப்பட நடிகரும் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளருமான சேரன் இனிமேல் கவின் மற்றும் லாஸ்லியாவின் பெயர் என் நாவில் வராது, அவர்கள் விஷயத்தில் தலையிடமாட்டேன் என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த தமிழ் சீசன் பிக்பாஸ் 3-யில் டைட்டில் வின்னராக மலேசியாவைச் சேர்ந்த முகன் அறிவிக்கப்பட்டார். அடுத்தபடியாக சாண்டி, அதற்கு அடுத்த படியாக இலங்கையை சேர்ந்த லாஸ்லியா அறிவிக்கப்பட்டார்.

இதில் பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த போது கவீன் மற்றும் லாஸ்லியாவிற்கு இடைஞ்சலாக இருப்பது சேரன் தான், அவர் ஏதோ ஓவராக செய்கிறார் என்றெல்லாம் டுவிட்கள் பறந்தன.

இதனால் ஏன் இப்படி செய்தேன் என்பதை சேரன் வெளியே வந்த பின்பு கூறுவார் என்று பார்த்தால், அவர் கவீன்-லாஸ்லியா விவகராத்தைப் பற்றி எந்த ஒரு பேட்டியிலும் வாய் திறக்கவில்லை.

இந்நிலையில் சேரன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கவின் லாஸ்லியா ரசிகப்பெருமக்களுக்கு, உங்களுக்கு பிடித்தவர்களை BBவீட்டிற்குள்ளும் சரி வெளிவந்த பின்னும் சரி புன்படுத்தவோ அவர்கள் சுதந்திரத்தில் தலையிடவோ நான் முயலவில்லை, நல்லெண்ண அடிப்படையில் இப்போது வேண்டாம் என கூறினேன். அது உங்களுக்கு தவறு எனில் வருத்தம் தெரிவிக்கிறேன்.

தகாத வார்த்தைகளால் பேசுவதால் பிரச்னை தீராது, இதை வளர்த்து நான் பெரிய ஆளாக விரும்பவில்லை.நான் எவ்வளவோ பேசி பழக முயன்றும் என்னோடு கவின் பேச விரும்பவில்லை புறக்கணித்தார் என்பதே உண்மை. நீங்களும் பார்த்திருப்பீர்கள்.இருந்தும் பிரச்னை பெரிதாகிவிடாமல் இருக்க அவருக்கு எடுத்து சொன்னேன்.

கவின் லாஸ்லியா விஷயத்தில் அவர்கள் முடிவுக்கோ வாழ்வுக்கோ நான் குறுக்கே நிற்க போவதில்லை. அவசியமுமில்லை.

இனி ஒரு முறை என் நாவில் இருவர் பெயரும் வராது. இத்தோடு நீங்கள் அனைவரும் நாகரீகம் கருதி நிறுத்திக்கொண்டால் நல்லது. என் பிரச்னைக்கு வரவேண்டாம்.

நான் வீட்டிற்குள்ளும் வெளியிலும் பேசிய கருத்துக்கள் காண்பித்த உணர்வுகள் யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்.

இப்போதும் புரிந்துகொள்வீர்கள் என நினைத்தே சொல்கிறேன். இதற்கு மேலும் என்னை பிடிக்காதவர்கள் என்னை பின்தொடர(follow)வேண்டாம்,மிக்க நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.