இளம்பெண்ணுக்கு நடக்கவிருந்த திருமணம் : மணமகனுக்கு பதிலாக தாலிகட்டிய வேறு மாப்பிள்ளை!!

நடக்கவிருந்த திருமணம்

சென்னையில் நேற்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணப்பெண் வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

மாதவரத்தை சேர்ந்த மகேஷ். இவர் மகள் மோனிகா (20). இவருக்கும் ஆந்திராவை சேர்ந்த உறவினரான மனோஜ் என்பவருக்கும் பெற்றோர்கள் திருமணம் நிச்சயம் செய்த நிலையில் திருமணம் நடக்கவிருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தோழியை பார்த்து விட்டு வருவதாக கூறிவிட்டு வெளியே சென்ற மோனிகா இரவு 9 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை. அவருக்கு போன் செய்தபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதையடுத்து மகேஷ் பொலிசில் இது குறித்து புகாரளித்தார்.

இந்நிலையில் நேற்று காலை மோனிகா, தந்தை மகேஷுக்கு போன் செய்து கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறிவிட்டு இருவரும் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

விசாரணையில் கார்த்திக் (25) என்பவரும் மோனிகாவும் ஒரு வருடமாக காதலித்ததும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மகேஷ் தனது உறவினரான மனோஜ் என்பவரை திருமணம் செய்ய பேசி முடித்ததும் தெரிந்தது.

இந்நிலையில் இருவரது பெற்றோரையும் காவல் நிலையத்துக்கு பொலிசார் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தார்கள்.